This translation may not reflect the changes made since 2014-04-05 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

குனு உரிமங்களின் மீறல்கள்

நீங்கள் குனு உரிமங்களின் மீறல்களை பார்த்தால் GPL, LGPL, AGPL, or FDL, நீங்கள் முதலில் செய்ய வேண்டுவது, பின்வரும் தகவல்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்

உரிமை மீறல்கள் உண்மையிலேயே இருப்பதாக தெரிந்தால், நீங்கள் செய்ய வேண்டியது பின்வரும் விவரங்களை சரியாக குறித்துக்கொள்ள வேண்டும்:

நீங்கள் எந்த அளவிற்கு மேற்கண்ட தகவல்களை கொண்டுள்ளீர்களோ, அந்த அளவிற்கு காப்புரிமையின் உரிமையாளருக்கு மேற்கொண்டு செயல்படுவது எளிதாக இருக்கும்

நீங்கள் இந்த தகவல்களை திரட்டிய பின், எந்த பொதியின் காப்புரிமை மீறப்படுள்ளதோ அதன் உரிமையாளருக்கு துல்லியமான தகவல் அனுப்பிட வேண்டும். ஏனெனில் காப்புரிமையாலரே சட்டப்படி காப்புரிமையை நிறுவுவதற்கு, நடவடிக்கை எடுக்கும் உரிமை உள்ளவர்

காப்புரிமையாளர், கட்டற்ற மென்பொருள் கழகமாக இருக்கும் பட்சத்தில், தங்களது தகவலை கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிடவும்.<license-violation@gnu.org>. நாங்கள் மேலும் தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள, உங்களை தொடர்பு கொள்ள வேண்டியது முக்கியம். ஆகவே தாங்கள் அடையாளமற்ற மின்னஞ்சல் அனுப்பிடும் மென்பொருள் பயன்படுத்தினால், ஏதேனும் தொடர்புகளுக்கான வழிகளை தரவும். தங்களுடனான எங்களது தகவல் தொடுர்புகளை மறையாக்கி பயன்படுத்த விரும்பினால், ஒரு மின்னஞ்சலில் தெரிய படுத்தவும். நாங்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம்

ஆனால் எங்களிடம் காப்புரிமை இல்லாத போது, நாங்கள் தனிச்சையாக நடவடிக்கை எடுக்க இயலாது. ஆகவே காப்புரிமை மீறல்கள் குறித்து தெரிவிக்கும் முன் அந்த காப்புரிமையின் உரிமையாளர் யார் என தெரிந்து கொள்வது நலம்.